ஸ்ரீவைகுண்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவைகுண்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஸ்ரீீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.இந்த முகாமிற்கு ஸ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் உஷா தேவி தலைமை தாங்கினார். உதவி ஊரக பொறியாளர் ரமேஷ், மூலக்கரை துணை மின் நிலைய உதவி பொறியாளர் விஜயலட்சுமி, உதவி நகர்ப்புற பொறியாளர் முரசொலி மாறன் ஆகியோர் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு, மின் தேவை மற்றும் உபயோக முறைகள் குறித்து விளக்கிப் பேசினார். இந்த முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன், உதவி தலைமை ஆசிரியர்முத்தையா, பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்