ஸ்ரீவைகுண்டத்தில்அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஸ்ரீவைகுண்டத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2023-04-23 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சிறப்பு முகாம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காசிராஜன் வரவேற்றார். கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும,் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்பது மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி முதலிடம் பெற்றிடவேண்டும் என்றார்.இதில்,கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்