தென்திருப்பேரையில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி
தென்திருப்பேரையில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி தலைமை தாங்கினார். பயிற்சியில் 30 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர். பஞ்சாயத்து யூனியன் பயிற்றுனர் தனலெட்சுமி, விளாத்திகுளம் வட்டார வளமைய ஆசிரியர் இஸ்ரேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுபாஜெனட் ஆனந்தி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசெல்வி, கிருஷ்ணவேனி ஆகியோர் செய்திருந்தனர்.