தெற்கு சிலுக்கன்பட்டியில்வேளாண் வளர்ச்சி திட்ட பணி முகாம்

தெற்கு சிலுக்கன்பட்டியில் வேளாண் வளர்ச்சி திட்ட பணி முகாம் நடந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

சாயர்புரம்:

தெற்குசிலுக்கன்பட்டி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகள் பராமரித்தல், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கி பேசினர். முகாமிற்கு வேளாண்மை அதிகாரி சந்திரகலா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், கால்நடை ஆய்வாளர் செல்வராணி, ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துனை இயக்குனர் மனோரஞ்சிதம் வரவேற்றர். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்ஆனந்த், உதவியாளர் காயத்ரி, ஸ்காட் வேளாண்மை துறைஆனந்த், ஊராட்சி செயலர் மாரிமுத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கோரம்பள்ளம் வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்சி மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்