மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2023-01-31 18:45 GMT

நாகர்கோவில்:

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவிலில் நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மென்பொருள் ஏற்றுமதி

மென் பொருள் ஏற்றுமதியில் இந்த ஆண்டு நாம் சாதனை படைத்துள்ளோம். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அளவில் மூன்றாவது இடம் ஆகும். வருகிற காலங்களில் இது கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும்.

தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் தற்போது 6 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. எந்தெந்த இடங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தேவையோ அங்கு அமைக்கப்படும். சோளிங்கநல்லூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையை பொருத்தவரையில் எதிர்காலத்திற்கு தேவையான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. அதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்