சிவகிரியில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
சிவகிரியில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.
சிவகிரி
சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே பழமையான கண்ணபிரான் பஜனை மடாலயம் உள்ளது. இம்மடாலயத்தில் 104-வது ஆண்டு கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு புதுவிநாயகர் கோவிவில் இருந்து மேள தாளம் முழங்க சாமிக்கு பட்டு பீதாம்பர சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண பகவானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் வெண்ணை திருடுதல் உள்ளிட்ட கிருஷ்ணலீலா சம்பவங்களை நடித்துக்காட்டினார்கள். மேலும் ஜீவாதெரு, குமரன்தெரு, புதுவிநாயகர் கோவில், காமாட்சியம்மன் கோவில், பஜனைமடாலயம் ஆகிய இடங்களில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.