சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் ரூ.530-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் ரூ.530-க்கு ஏலம் போனது.

Update: 2023-06-15 21:41 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி பூக்கள் ஏலம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.385-க்கும், முல்லை ரூ.260-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.55-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், கனகாம்பரம் ரூ.530-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்