சத்தியமங்கலம் மார்க்கெட்டில்காக்கடா பூ கிலோ ரூ.825-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் காக்கடா பூ கிலோ ரூ.825-க்கு ஏலம் போனது.

Update: 2023-05-28 21:02 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.500-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.41-க்கும், பட்டுப்பூ ரூ.59-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.650-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.60-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்