சாத்தான்குளத்தில் புதிய அனைத்து மகளிர் போலீஸ்நிலையம் உருவாக்கம்
புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பாமா பத்மினி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், முதுநிலை போலீஸ்காரர் மற்றும் 4 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். சாத்தான்குளம,் மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டார்மடம் ஆகிய போலீஸ் நிலைய எல்கைக்கு உள்பட்ட மகளிர்களுக்கான வழக்குகள் இந்த போலீசாரால் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ெதரிவிக்கப்பட்டுள்ளது.