உப்புக்கோட்டையில்ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகார்

உப்புக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

Update: 2023-01-19 18:45 GMT

உப்புக்கோட்டையில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதற்கிடையே இந்த 2 கடைகளிலும் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கிய பொதுமக்கள் அரிசி பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்றதாக உள்ளது என்று புகாா் கூறுகின்றனர். மேலும் கடைகளில் அரிசி வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ரேஷன் கடைகளில் அரிசி தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடையில் அரிசி வினியோகம் குறித்து கேட்டால் முறையான பதில் தெரிவிப்பதில்லை எனவே தரமான அரிசியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்