சாயர்புரத்தில் ரூ.1.64 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணி:கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
சாயர்புரத்தில் ரூ.1.64 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணியை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வுசெய்தார்.
சாயர்புரம்:
சாயர்புரம் மெயின் ரோட்டில் ரூ.1.64 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். பின்பு பேரூராட்சி அலுவலகம், பேரூராட்சி குப்பை கிடங்கு, சிவத்தையாபுரம் பள்ளியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் பதிவு முகாமை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, நிர்வாக அதிகாரி பிரபா, துணைத் தலைவர் பிரியா மேரி, நகரபஞ்சாயத்து கவுன்சிலர்கள், நகர தி.மு.க. செயலாளர் கண்ணன், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசுவாமி, வருவாய் ஆய்வாளர் விஜய் ஆனந்த், கிராம நிர்வாக அதிகாரி முத்தீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.