ஊரக வேலை உறுதி திட்டத்தில்கைப்பேசி செயலி மூலம் வருகைப்பதிவேடு:இன்று முதல் அமல்
ஊரக வேலை உறுதி திட்டத்தில் கைப்பேசி செயலி மூலம் வருகை பதிவேடு செய்யும் முறை இன்று முதல் அமலாகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தனிநபர் பணிகள் தவிர்த்து இதர அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களின் வருகை தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு என்ற தேசிய கைப்பேசி கண்காணிப்பு முறையில் மட்டுமே பதிவு செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே, இத்திட்டத்தில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களும் தங்களின் வருகையை வேலைநாளின் முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளையும் குறித்த நேரத்தில் புகைப்படத்துடன் கைப்பேசி செயலி மூலம் தவறாமல் பதிவு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டம் தொடர்பாக புகார்கள் ஏதும் இருந்தால் மாவட்ட குறைதீர்ப்பாளரை 8925811328 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.