சொத்து தகராறில்சகோதரர்கள் மீது தாக்குதல்

சொத்து தகராறில் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Update: 2023-01-17 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மகன்கள் சண்முகராஜ் (வயது 52), விஜயகுமார் (44), முத்துராஜ் ( 40). கோதண்டராமன் தனக்குச் சொந்தமான தோட்டத்தை சண்முகராஜ் மற்றும் முத்துராஜின் பிள்ளைகளுக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்து விட்டாராம்.

இதையறிந்த விஜயகுமார் ஒரு வருடமாக தகராறு செய்து வருகிறாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகராஜ் மற்றும் முத்துராஜ் ஆகிய இருவரும் தோட்டத்தில் இருந்துள்ளனர். அங்கு சென்ற விஜயகுமார், அவரது உறவினர் ஆணஸ்ட்ராஜ் ஆகிய இருவரும் சண்முகராஜ் மற்றும் முத்துராஜை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடி விட்டார்களாம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர்.

இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், ஆணஸ்ட்ராஜ் (வயது 29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்