பெரியகுளத்தில்நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்:இன்று நடக்கிறது

பெரியகுளத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடக்கிறது என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவக்குமார் தெரிவித்தார்.

Update: 2023-04-11 18:45 GMT

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நலவாரியம் ஆகியவற்றில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவுரையின்பேரில் இந்த முகாம் நடக்கிறது.

முகாமில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வரும் தொழிலாளர்கள் தங்களுடைய செல்போன் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, ஆதார் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், வயது தொடர்பான ஆவணங்களாக பிறப்பு சான்றிதழ், பள்ளிச் சான்று, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலுடன் நேரில் கலந்துகொள்ள வேண்டும். பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு சான்று வழங்குவதற்கு ஏதுவாக பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்