பெரியகுளத்தில் விளையாட்டு மைதானத்தை பராமரிக்க கோரிக்கை
பெரியகுளத்தில் விளையாட்டு மைதானத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள நடைபாதையில் அதிக அளவில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் நடை பயிற்சி செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் நடைபாதைக்கு அருகே மின்கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளன.
மின் கம்பங்களின் செல்லும் வயர்களும் அங்குள்ள மரக்கிளைகளில் சிக்கி தாழ்வாக உள்ளது. இதனை சீரமைக்க மின்வாரிய துறையினரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும். மேலும் விளையாட்டு மைதானத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.