பெரியகுளம் நகராட்சியில்குப்பைகள் சேகரிப்பு மையம் தொடக்கம்
பெரியகுளம் நகராட்சியில் குப்பைகள் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டது.
பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு கருதி கழிவுகளை குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி திட்டத்தின் கீழ் உலர் கழிவுகள், குப்பைகளை சேகரிப்பதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்கரை சோமசுந்தர பூங்கா சங்கு ஊதும் இடம் அருகே மற்றும் புதிய பஸ் நிலைய பொது சுகாதார பிரிவு அலுவலகம் ஆகிய 2 இடங்களில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.
இதில் பெரியகுளம் நகராட்சி ஆணையர் புனிதன் கலந்து கொண்டு பேசும்போது, காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மையங்கள் செயல்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்திய, மற்றவர்களுக்கு தேவைப்படும் உபயோகமான மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி, காலணி, பொம்மை, புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை இந்த மையத்தில் ஒப்படைக்கலாம். மேலும் தங்கள் பகுதிக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடமும் ஒப்படைக்கலாம் என்றார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, சேகர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.