பரமத்திவேலூரில் ரூ.8.82 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.8.82 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

Update: 2023-06-22 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை 15 ஆயிரத்து 520 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.75.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.73.12-க்கும், சராசரியாக ரூ.63.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 86 ஆயிரத்து 220-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 949 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.75.69-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.10-க்கும், சராசரியாக ரூ.72.16-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 82 ஆயிரத்து 217-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்