பண்ணாரி கோவிலில் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்த நடிகர் வடிவேலு

பண்ணாரி கோவில்

Update: 2022-08-09 16:23 GMT

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சினிமா நடிகர் வடிவேலு நேற்று மாலை 3.15 மணிக்கு காரில் வந்தார். பின்னர் அவர் காரை விட்டு இறங்கி கோவிலுக்கு சென்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்து விபூதியை வாங்கி நெற்றில் பூசிக்கொண்டார். பின்னா் அவர் அங்கிருந்து ெவளியேறி கோவிலில் உள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டார். பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சினிமா நடிகர் வடிவேலு, வந்த தகவல் பக்தர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் பக்தர்களுக்கு தெரியவந்தது. உடனே அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனே அவருடன் பக்தர்கள் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் நடிகர் வடிவேலு பேசுகையில், 'கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த படப்பிடிப்பில் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு கோவைக்கு காரில் சென்று கொண்டு இருந்தேன். பண்ணாரி அம்மன் மீது நான் மிகுந்த பக்தி உடையவன். எனவே அம்மனை வணங்க வேண்டும் என்பதற்காகவே காரை விட்டு இறங்கி வந்தேன். பின்னர் கோவிலின் உள்ளே சென்று அம்மனை வணங்கினேன்,' என்றார்.

அப்போது அங்கு கோவிலில் துப்புரவு வேைலயில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கிபடி வந்து வடிவேலுவின் காலில் விழுந்து வணங்கினார். உடனே அந்த பெண்ணை தூக்கி விட்டதுடன், நன்றாக இருங்கள் என அவரை வாழ்த்தினார். மேலும் அந்த பெண்ணுடன் வடிவேலு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்