பழனிசெட்டிபட்டியில்ஜவுளி கடையில் தீ விபத்து
தேனி அருகே ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள வணிக வளாக கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு தனியார் ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அவர்கள் அணைத்தனர். இந்த விபத்தில் அங்கிருந்த துணி மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.