ஓட்டப்பிடாரத்தில்650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஓட்டப்பிடாரத்தில் 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் இந்திரா நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுந்தர்ராஜ் என்பவரது வீடு அருகே தெருவோரத்தில் ஒரு மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தனர். அங்கு மூட்டைகளில் இருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யார்? என உடனடியாக தெரியவில்லை. இதை தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரசியை பதுக்கி வைத்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.