ஊஞ்சலூரில் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த பெண்கள்

ஊஞ்சலூரில் அரசு டவுன் பஸ்சை பெண்கள் சிறைபிடித்தனர்.

Update: 2022-08-24 21:35 GMT

ஊஞ்சலூர்

ஊஞ்சலூரில் அரசு டவுன் பஸ்சை பெண்கள் சிறைபிடித்தனர்.

நிற்காமல் சென்ற பஸ்

கொடுமுடி பணிமனையை சேர்ந்த 43-ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு 43-ம் எண் டவுன் பஸ் சென்றுகொண்டு இருந்தது. அப்போது ஊஞ்சலூர் அருகே உள்ள மணிமுத்தூர் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் சிலர் நின்றுகொண்டு பஸ்சை நிறுத்த முயன்றுள்ளார்கள். ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

சிறைபிடிப்பு

இதையடுத்து ஆவேசம் அடைந்த பெண்கள் நடந்தே ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் வந்து காத்திருந்தார்கள். அப்போது கொடுமுடியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த 43-ம் எண் டவுன் பஸ்சை ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த மணிமுத்தூர் பெண்கள் சிறைபிடித்தார்கள்.

பஸ் நிறுத்தத்தில் நாங்கள் நிறுத்த கை காட்டியபோது ஏன் பஸ்சை நிறுத்தவில்லை? என்று டிரைவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்திருந்த பெண்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னர் பஸ் ஈரோடு நோக்கி சென்றது. இந்த சம்பவம் ஊஞ்சலூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்