நாசரேத்தில் கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை

நாசரேத்தில் கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2022-10-19 18:45 GMT

நாசரேத்:

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் 19-வதுஆண்டு திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை வருகிற 25-ந் தேதி நடை பெறுகிறது.இதனை முன்னிட்டு நேற்று மிஷனரிகளை நினைவு கூறும் பவனி தூத்துக்குடி பரி.யாக்கோபு ஆலயம் டூவிபுரத்திலிருந்து தொடங்கியது. அங்கிருந்து சாயர்புரம், மூக்குப்பீறி நாசரேத் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மிஷனரிக ளின் கல்லறைகளில் மலர் வளையம் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் அமைந்துள்ள கனோன் ஆர்தர் மர்காஷியஸ் ஐயர் கல்லறையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப் பட்டது.

இந்நிகழ்வில் திருமண்டல துணைத் தலைவர் வி.எம். எஸ். தமிழ்ச்செல்வன், லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றாக், பொருளாளர் மோகன் ராஜ் அருமைநாயகம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், துவக்க, நடுநிலைப் பள்ளிகளின் மேலாள ர் ஜாஸ்பர் அற்புதராஜ், கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட்வெஸ்லி, திருமண்டல நற்செய்தி அருட்பணித்துறை இயக்குனர் செல்வசிங் ஆர்தர், திருமண்டல சமூக நலத்துறை இயக்குனர் ஜெபக்குமார் ஜாலி, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர உறுப்பினர்கள உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்