நாசரேத்தில் மது விற்றவர் கைது

நாசரேத்தில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-07 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது நாசரேத் பஸ்நிலையம் அருகே ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்த அய்யாதுரை மகன் சரவணன் (வயது 46) என்பவர் மோட்டார் சைக்கிளில் வைத்து சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்