நாசரேத்தில் கிறிஸ்தவ கூட்டம்

நாசரேத்தில் கிறிஸ்தவ கூட்டம் நடந்தது.

Update: 2023-07-10 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் தூய யோவான் பேராலய முழு இரவு ஜெபக்குழுவின் சார்பில் 46-வது பேரின்ப பெருவிழா கூட்டம் 3 நாட்கள் கதீட்ரல் வளாகத்தில் நடைபெற்றது. பேரின்ப பெருவிழா கூட்டங்கள் தினமும் மாலையில் நடைபெற்றது. கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி தலைமை தாங்கி, தொடக்கி வைத்தார். உதவி குருவானவர் பொன்செல்வின் அசோக் குமார் முன்னிலை வகித்தார். மதுரை விளாங்குடி இயேசு மறவார் ஊழியம் நிறுவனர் டென்சிங் டேனியல் தேவசெய்தி கொடுத்தார். ஏற்பாடுகளை நாசரேத் தூய யோவான் பேராலய முழு இரவு ஜெபக்குழு செயலாளர் லயன் புஷ்பராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூஸ் ராக்லன்ட், பொருளாளர் இம்மானுவேல், நிர்வாகிகள் செல்வராஜ், தியோடர் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்