நாசரேத்தில்மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாசரேத்தில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் நாசரேத் பகுதியில் "மாற்றத்தை தேடி" சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் எபநேசர், செல்வின் தலைமையிலான போலீசார் நாசரேத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பிரகாசபுரம் பகுதியில், கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.