தேசிய தொழிற்சான்றிதழில்திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

தேசிய தொழிற்சங்கத்தில் திருத்தம் கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் தெரிவித்தார்.

Update: 2023-03-26 18:45 GMT

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரின் குறிப்பாணையில் 2014-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் தேனி மாவட்டத்தின் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழிற்பிரிவின் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பயிற்சியாளர்களின் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சியாளர்களின் தாய் தந்தை பெயர் திருத்தங்கள், பயிற்சி பெற்ற தொழிற்பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்து கொள்ளலாம். இதற்கு நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பாகும்.

இதனை தொடர்ந்து வேறு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. எனவே அசல் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தம்கோரும் முன்னாள் பயிற்சியாளர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து பெற்ற மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை, அண்மையில் எடுத்த புகைப்படம் ஆகியவற்றுடன் www.ncvtmis.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது தொழிற்பயிற்சி நிலையத்திலோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்