நாலாட்டின்புத்தூரில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கியவர் கைது

நாலாட்டின்புத்தூரில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-19 18:45 GMT

ரேஷன் பொருட்கள் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், தலைமை காவலர்கள் கந்த சுப்பிரமணியன், பூலையா நாகராஜன் ஆகியோர் கோவில்பட்டி தாலுகா, நாலாட்டின்புதூர் முடுக்குமீண்டான்பட்டி வடக்கு தெருவில் சோதனை செய்தனர். அப்போது ஒருவீட்டில் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்த லிங்கையா மகன் நாராயணன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலைத் கூறியதால், போலீசார் அந்த மூட்டைகளை சோதனை செய்தனர். சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 17 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடத்துவதற்காக அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசி மூட்டைகளை பதுக்கிய நாராயணனை கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்