முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. தொழிலாளி. இவரது தாயார் மாரியம்மாள். இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கருப்பசாமியின் மனைவி மற்றும் பிள்ளைகள் முறையாக கவனிக்கவில்லை என்று சொல்லி அவர்களுடன் கருப்பசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.