முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-12 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஸ்ரீவித்யன் (வயது 27). வெல்டிங் தொழிலாளி. இவர் வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்