முத்தையாபுரத்தில் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை
முத்தையாபுரத்தில் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கமாள்புரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது60). காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.