முத்தையாபுரத்தில் வியாபாரி தற்கொலை

முத்தையாபுரத்தில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-19 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). வியாபாரி. இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில் சர்க்கரை நோயினால் அவரது காலில் இருந்த புண் குணமாகாததால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், தனது கடையில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து

முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்