முத்தையாபுரத்தில்மரக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

முத்தையாபுரத்தில் மரக்கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.

Update: 2023-05-31 18:45 GMT

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி ஆசாரி. இவரது மகன் செல்லப்பன் (வயது 43). இவர் முத்தையாபுரத்தில் தனியார் காம்ப்ளக்ஸில் முத்து மர இளைப்பகம் கடையை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, முன் வாசல் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.14 ஆயிரத்து 850-ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் சம்பவ கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். ேமலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்