முள்ளக்காட்டில்கும்பல் தாக்கியதில்வியாபாரி உள்பட 5 பேர் காயம்

முள்ளக்காட்டில் கும்பல் தாக்கியதில் வியாபாரி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-08-31 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பார்வதிபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் சிவசாமி (வயது 42). உப்பு வியாபாரி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கும், உறவினர் மனைவியான அன்னலட்சுமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் சிவசாமி, வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை சத்தம் போட்டுக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது வீட்டு வாசல் வழியாக சென்ற அன்னலட்சுமி, தன்னைத்தான் அவர் திட்டுவதாக நினைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த கணவர் வெற்றிவேல் முருகன், நண்பர்களான அந்தோணி, ஜேசுபாலன் ஆகியோருடன் கும்பலாக சென்று, சிவசாமி, அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேரை கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் சிவசாமி உள்பட 5 பேர் காயமடைந்தனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்