மயிலாடும்பாறை கிராமத்தில்மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மயிலாடும்பாறை கிராமத்தில் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மயிலாடும்பாறை கிராமத்தில் நேற்று கற்பக விநாயகர் மற்றும் மந்தையம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மயிலாடும்பாறை கிராமத்தில் தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை காலயாக வேள்வி, பிம்பசுத்தி, கணபதிஹோமம், அனுக்கை வருணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து கற்பக விநாயகர் மற்றும் மந்தையம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் வருசநாடு, மூலக்கடை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.