பெருந்துறையில்சரக்கு வேன்-கார் மோதல்;ரோட்டில் உடைந்த முட்டைகள்
பெருந்துறையில் சரக்கு வேனும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ரோட்டில் முட்டைகள் உடைந்தன.
பெருந்துறை
சேலத்தில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று கோவையை நோக்கி நேற்று காலை சென்றுகொண்டு இருந்தது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிக்கோவில் பிரிவு அருகே சென்றபோது பின் புறமாக வந்த கார் ஒன்று வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் முட்டைகள் ரோட்டில் சிதறி உடைந்தன. நல்ல வேளையாக வேன் மற்றும் காரில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.