கும்பகோணத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-29 20:09 GMT

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் இந்து உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அந்த பகுதியை சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டார். இதனை கண்டித்தும், ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டியும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றிட வேண்டியும் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்