குள்ளஞ்சாவடியில்மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-24 18:45 GMT

குள்ளஞ்சாவடி, 

பொங்கல் பாிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக்கோரி குள்ளஞ்சாவடியில் நேற்று முன்தினம் விவசாயிகள் கரும்பு மற்றும் விஷ பாட்டிலுடனும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடுரோட்டில் சமையல் செய்ததுடன், சாதத்தை சாலையிலேயே போட்டு சாப்பிட்டனர். இதனால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சுமார் 4½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பேய்க்கானத்தத்தை சேர்ந்த வீரமணி, அப்பியம்பேட்டையை சேர்ந்த செந்தாமரை கண்ணன், கிருஷ்ணன்பாளையத்தை சேர்ந்த செல்வ கணபதி, ராஜ்மோகன், முத்துக்குமார், செந்தில், கட்டியங்குப்பத்தை சேர்ந்த குப்புசாமி, மாயா, சின்னசாமி உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்