குளத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை

குளத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2022-08-25 14:21 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23. 57 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து முன்னிலை வகித்தார். விழாவில் ஊரட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிக்கான பூமி பூஜையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நேற்று விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகளை நிறைவேற்றவும், விளாத்திகுளம் வளர்ச்சி பணிகள் குறித்து வார்டு உறுப்பினர்களிடம் குறைகேட்பு கூட்டம் அலுவலகத்தில் நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வேலுச்சாமி, செயல் அலுவலர் சுந்தரவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு தொகுதியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிடவும், விளாத்திகுளம் பேரூராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் வார்டு உறுப்பினர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

மேலும் மரங்கள் மக்கள் இயக்கம் மூலமாக விளாத்திகுளம் பகுதிகளில் மரங்கள் வளர்ப்பது குறித்து அவர் ஆலோசனை வழங்கினார். விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்