குலசேகரன்பட்டினத்தில் அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
குலசேகரன்பட்டினத்தில் அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்டம், ஊராட்சி பொதுநிதி மூலம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியா துரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், பஞ்சாயத்து துணைத்தலைவர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெஸிபொன்ராணி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பாலசிங் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் தி.மு.க. மாவட்ட வர்த்தகஅணி துணை அமைப்பாளர் ரவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.