குலசேகரன்பட்டினத்தில் புதன்கிழமை நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு

குலசேகரன்பட்டினத்தில் புதன்கிழமை நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-02-28 18:45 GMT

திருச்செந்துர்:

குலசேகரன்பட்டினம் வடக்கூரில் தனி ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வருகிற 10-ந் தேதிக்குள் தனி ரேஷன் கடை திறக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதில், வட்ட வழங்கல் அதிகாரி பாலசுந்தரம், கூட்டுறவு துறை அதிகாரிகள், சிபிஎம் உடன்குடி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், உடன்குடி நகர செயலாளர் சிவசங்கர் மற்றும் அஜ்மல், மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்