குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரத வீதி உலா
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரத வீதி உலா நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஐப்பசிமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6மணிக்கு நடைதிறக்கப்பட்டது. நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தை சுற்றி அன்னை முத்தாரம்மன் ரதவீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.