குலசேகரன்பட்டினத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குவதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-09-16 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா காலத்துக்கு பின்பு இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் உட்பட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்