குலசேகரன்பட்டினத்தில்இப்தார் நோன்பு திறப்பு

குலசேகரன்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-19 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்புநிகழ்ச்சி குலசேகரன் பட்டினத்தில் நடந்தது, தமிழ்நாடு நுகர்வோர் பேரவைமாநில தலைவர் ஏ.வி.பி மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் கமால்தீன் முன்னிலை வைத்தார். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா வரவேற்றுப் பேசினார், சிறப்பு விருந்தினராக அரசு வக்கீல் சந்திரசேகர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் நகர தலைவர் ஆறுமுக ராஜா, செயலாளர் மரிய இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் ரஹமத்துல்லா இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்