குச்சனூர் பேரூராட்சியில் காசநோய் மருத்துவ முகாம்

குச்சனூர் பேரூராட்சியில் காசநோய் கண்டறியும் சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-08 17:03 GMT

குச்சனூர் பேரூராட்சியில் காசநோய் கண்டறியும் சிறப்பு நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் லாவண்யா தலைமையில் மருத்துவ குழுவினர் நடமாடும் வாகனத்தில் உள்ள கருவி மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக எக்ஸ்-ரே எடுத்தனர். இதில் காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மேல் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்