கோவில்பட்டியில்நடனப்பள்ளி ஆண்டுவிழா
கோவில்பட்டியில் நடனப்பள்ளி ஆண்டுவிழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சர்க்கஸ் மைதானத்தில் ஓபன் கேட் நடனப்பள்ளியின் 9- ம் ஆண்டு நடனப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டாக்டர் காந்தி ராஜ், தொழிலதிபர் பெரியசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடனப்பள்ளி நிறுவனர் முத்து வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாணவர்கள் நடிகர் அஜித் குமார் முகமூடி அணிந்து நடனம் ஆடி கைதட்டலை பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கொண்டு குத்துவிளக்கேற்றி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களையும், வழங்கி பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் பத்ம பிரகாஷ், நர்மதா தேவி, பாலமுருகன், துரை பத்மநாபன், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம் தங்கமாளிகை பிரகாஷ், தொழிலதிபர் முருகன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவி சாதனா நன்றி கூறினார்.