கோவில்பட்டிவட்டார தடகள போட்டியில் எவரெஸ்டு பள்ளி மாணவர்கள் சாதனை

கோவில்பட்டிவட்டார தடகள போட்டியில் எவரெஸ்டு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-09-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வ. உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்டார தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கோவில்பட்டி எவரெஸ்டு மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பூவரசன் 400 800 மீட்டர் ஓட்டத்தின் முதலிடமும், மாணவி தீபா 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், மரியே பிருந்தாா 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், தடை தாண்டும் போட்டியில் மாணவி ஸ்ரீ ஹரிணி இரண்டாம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் காளிராஜ், கனகலட்சுமி 3-ம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் கீர்த்திகா 3-ம் இடமும், கோலூன்றி தாண்டும் போட்டியில் மாணவி செல்வி, மாணவர் வரதராஜ் மூன்றாம் இடமும், உயரம் தாண்டும் போட்டியில் காளிராஜ், வட்டி எறியும் போட்டியில் முத்துச்செல்வி மூன்றாம் இடமும், தொடர் ஓட்டத்தில் மாணவர் மாணவிகள் அணி 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவரும் செயலாளருமான ஆர்.ஏ.அய்யனார் பரிசளித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயஜோதி, மாரி முருகேசன், கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வட்ட தடகளப் போட்டியில் கலந்து கொண்டு குண்டு எறிதல் போட்டியில் மாணவி நிவேதா முதல் பரிசும், 200 மீ ஓட்டத்தில் மகாதர்ஷினி முதல் பரிசும், மாணவி ஸ்ரீ சுந்தர லட்சுமி 400 மீ, 800 மீஓட்டத்திலும், உயரம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாம்பியன் பரிசை வென்றார். பள்ளி மாணவிகள் தனிநபர் பிரிவில் 15 புள்ளிகளும், குழு போட்டிகளில் 2-ம் இடத்தையும், தடகள போட்டிகளில் 105 புள்ளிகளும் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றார்கள். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் பெ. கதிர்வேல், கல்வி சங்க உறுப்பினர்கள் ரத்னசாமி, ஆழ்வார் சாமி, தலைமை ஆசிரியை பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்