கோவில்பட்டி கோட்டத்தில்தட்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு மின்இணைப்பு

கோவில்பட்டி கோட்டத்தில் தட்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-18 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் எஸ். காளிமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து, மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தால் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விரைவாக, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய இணைப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவில்பட்டி கோட்டத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற செயற் பொறியாளரை தொடர்பு கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்