கோவில்பட்டி கோட்டத்தில்மின்இணைப்புடன் ஆதார் எண்ணைஇணைக்க சிறப்பு முகாம்
கோவில்பட்டி கோட்டத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்டத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது.
சிறப்பு முகாம்
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சஹர் பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி மின்வாரிய கோட்டப் பகுதியிலுள்ள மின் மின்நுகர்வோர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) முதல் 13-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை மின் நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும்.
கோவில்பட்டி நகர்
11-ந்தேதி (புதன் கிழமை) கோவில்பட்டி நகர், கிழக்குப் பகுதி திட்டங்குளம், பங்களா தெரு, மேற்கு பகுதி ஆலம்பட்டி, தோணுகால் விலக்கு, வடக்கு பகுதி கோவில்பட்டி, தெற்கு பகுதி கோவில்பட்டி, பாரதி நகர். கிராமப் பகுதிகளுக்கு காம நாயக்கன்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், தாமஸ் நகர், நாலாட்டின் புத்தூர், கயத்தார், கடம்பூர், கீழமங்கலம், எப்போதும் வென்றான். 12-ந் தேதி(வியாழக்கிழமை) கோவில்பட்டி, திட்டக்குளம், பங்களா தெரு, வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி, சாஸ்திரி நகர், மந்தித் தோப்பு, கழுகுமலை, எட்டயபுரம், லிங்கம்பட்டி, வெயிலுகந்தபுரம் கயத்தாறு, வடக்கு மயிலோடை, பசுவந்தனை, எப்போது வென்றான்.
கழுகுமலை
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோவில்பட்டி, கணேஷ் நகர், கதிரேசன் கோவில் ரோடு கம்மவார் கல்யாண மண்டபம், காமராஜ் நகர், மந்தித்தோப்பு, கழுகுமலை, எட்ைடயபுரம், கடலையூர், வில்லிசேரி, கயத்தார் டவுன், பன்னீர் குளம், வண்டானம், சோழபுரம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. இவ்வாற் அவர் தெரிவித்துள்ளார்.