கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில்13 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 13 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 13 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
96 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 1,541 மாணவர்களும், 1,764 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 1,407 மாணவர்களும், 1,698 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 94 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,831 மாணவர்கள் 1,773 மாணவிகள் தேர்வு எழுதியதில், 1,725 மாணவர்களும், 1,741 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீதம் ஆகும்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 749 மாணவர்களும், 585 மாணவிகளும் தேர்வு எழுதியதில், 739 மாணவர்களும், 583 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 96 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
100 சதவீதம்
மேலும், எம்.கோட்டூர், காடல்குடி, கோடாங்கிபட்டி, படர்ந்தபுளி, விஜயாபுரி, சிதம்பரம்பட்டி, கோவில்பட்டி லாயல்மில் காலனி, மேல்மாந்தை ஆகிய அரசு பள்ளிகளும், சென்னமரெட்டிபட்டி, பி.வி.கே.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காந்திநகர் நகராட்சிஉயர்நிலைப்பள்ளி, கருப்பூர், இளம்புவனம், பரிவில்லிகோட்டை ஆகிய 13 அரசு பள்ளிகளிலும் 346 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கூலி தொழிலாளி மகள் சாதனை
கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் மாணவி மோகனாஸ்ரீ 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் கோவில்பட்டி அருகே கோடாங்கிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவரது தந்தை முத்துராஜ், தாய் காளீஸ்வரி இருவரும் கூலி வேலை செய்து படிக்க வைத்துள்ளனர். கல்வி மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற மாணவி மோகனா ஸ்ரீயை பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.