கோவில்பட்டி பகுதியில்பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு:தலைமை ஆசிரியர் கூட்டத்தில் முடிவு

கோவில்பட்டி பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்த தலைமை ஆசிரியர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-24 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டார வளமையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி ஜெயப்பிரகாஷ் ராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் முத்தம்மாள், பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நட்டாத்தி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்வது பற்றியும், உரிய செயலியில் பதிவு செய்வது பற்றியும் விளக்கி பேசினார். கூட்டத்தில் வெவ்வேறு காரணங்களால் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாரத்திற்கு 3 நாட்களுக்கு மேல் வருகை புரியாத மாணவர்களின் பெற்றோரை, வகுப்பு ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு காரணத்தை அறிந்து, மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரநடவடிக்கை எடுப்பது பற்றியும் கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்